மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக மானாமதுரை கல்குறிச்சி உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் போக்சோவில் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக மானாமதுரை கல்குறிச்சி உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் போக்சோவில் கைது

 


மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக மானாமதுரை கல்குறிச்சி உயர்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் போக்சோவில் கைது.



ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முனியாண்டி மகன் முருகேசன் (50) என்பவர் மண்டபம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த நிலையில், அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கணித ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த புதன் கிழமையன்று பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதாக பள்ளியில் பணிபுரிந்து வரும் கணித ஆசிரியர் முருகேசன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது அடுத்து, வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உள்ளிட்டோர் நடத்திய விசாரணையில், முருகேசன் மீது அளித்த புகார் உறுதியானதை அடுத்து கணித ஆசிரியர் முருகேசனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad