குலதெய்வம் கும்பிடுவதற் காக கோவில் கட்ட இடம் கேட்டு என் எஸ் கே நகர் பொது மக்கள் மனு!
குடியாத்தம் ,ஆகஸ்ட் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன் யா ஆற்றுப்பகுதியில் உள்ள என் எஸ் கே நகர் பகுதியில். சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வந்த பொதுமக்க ளை உயர்நீதிமன்ற உத்தரவின் படி வீடு களையும் அங்கிருந்த கோவில்களிலும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இடிக் கப்பட்டது தற்போது அப்பகுதியில் குடியி ருந்தவர்கள் ஆங்காங்கே வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள் இந்நிலையில் கடந்த வாரம் என் எஸ் கே நகர் பகுதி மக்கள் குலதெய்வம் சாமி கும்பிடுவதற் காக நீர்நிலைப் பகுதியில் சாமி சிலை வைத்தார்கள் அனுமதி இல்லாமல் வைக் கப்பட்டது என்று கூறி வருவாய் துறையி னர் அப்புறப்படுத்தினார்கள் இதனால் இன்று சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண் கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் குல தெய்வம் சாமி கும்பிடுவதற் காக மாற்று இடம் கேட்டு ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் வெங்கடேசன் இடம் கோரிக்கை மனு அளித்தனர்
குடியாத்தம் செய்தியாளர் கே வி இராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக