காட்பாடியில் வாலிபரிடம் 'ஸ்மார்ட் வாட்ச்' பறிப்பு! போலீசார் விசாரணை!
காட்பாடி , ஆகஸ்ட் 4 -
வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதிநகரை சேர்ந்தவர் அனிகிருஷ்ணன் (வயது 33) இவர் தனது நண்பருடன் காட்பாடியில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க சென் றார். பின்னர் காட்பாடி திருவலம் சாலை யில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென கத்தியை காட்டி அனிகிருஷ்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.மேலும் அவரிடம் இருந்து ஸ்மார்ட் வாட்ச் பறிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக