மழைநீர் வடிகால் கால்வாய் ஒரே நாளில் இடிந்து விழுந்தது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

மழைநீர் வடிகால் கால்வாய் ஒரே நாளில் இடிந்து விழுந்தது


தமிழகமெங்கும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் திருப்பூர் அனுப்பர்பாளையம் அவிநாசி ரோடு திலகர் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் கால்வாய் ஒரே நாளில் இடித்து விழுந்தது தரம் இல்லாமல் இந்த பாலங்கள் கால்வாய்கள் கட்டப்படுகிறது என்று சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாகும் இதே போல இணைப்பு சாலையில் உள்ள பாலங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது  ஒன்றை அடி இரண்டு அடி கனம் உள்ளது ஆனால் தற்போது அதை எல்லாம் இடித்து எடுத்துவிட்டு இந்த மழை நீர் வடிகால்  பாலம் அமைக்கிறார்கள் அதன் கனம் ஒரு முக்கால் அடி அளவு மட்டுமே உள்ள நிலையில் இதற்கு கட்டப்படும் கம்பிகளின் கனம் குறைவு மற்றும் எண்ணிக்கை குறைவு இதனால் கனரக வாகனங்கள் அந்த சாலையில் இந்த பாலத்தின் மேல் பயணிக்க முடியாது பிற்காலத்தில் இது இடிந்து விழுகும் நிலை உள்ளது திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது  மண்டல அலுவலகத்தின் முன்பு உள்ள பழைய பாலத்தை இடித்து தரம் இல்லாத இந்த மழை நீர் வடிகால் கால்வாய் பாலம் அமைக்கிறார்கள் இதுபோன்ற பல இடங்களில் அமைத்துள்ளார்கள் பிற்காலத்தில் இது இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது இதை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மக்கள் விழிப்புணர்வு அமைப்புகளின் கோரிக்கையாகும் இந்த படத்தில் உள்ள அந்த பாலத்தின் கன அளவு குறைவாக உள்ளதை  பார்க்கலாம்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad