பந்தலூர் அருகே உப்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 ஆகஸ்ட், 2025

பந்தலூர் அருகே உப்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


பந்தலூர் அருகே உப்பட்டியில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.


இந்திய செஞ்சிலுவை சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், நெல்லியாளம் நகராட்சி, ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியன சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமிற்கு நெல்லியாளம் நகராட்சி தூய்மை களப்பணி உதவியாளர் மலர்க்கொடி தலைமை தாங்கினார். ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தூய்மை மேற்பார்வையாளர் சுப்பிரமணி, தூய்மை தூதுவர்கள் சிந்துஜா, சுபஶ்ரீ சரஸ்வதி, நுகர்வோர் பாதுகாப்பு மையம் நிர்வாகி பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமினை துவக்கி வைத்தார். 


இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுவினர் மருத்துவர் ஜெய்னப் பாத்திலா, செவிலியர் சுமதி, மருந்தாளுனர் நவீன், நிர்வாக உதவியாளர் லாய்சான் அடங்கிய மருத்துவ குழுவினர் இரத்த அழுத்தம், எடை, இரத்த சர்க்கரை அளவு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர் இலவச மருந்துகளும் வழங்கப்பட்டது.


முகாமில் நெல்லியாளம் நகராட்சி பணியாளர்கள், மகளிர் தையல் பயிற்சி மைய மகளிர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad