பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் திருப்புத்தூர் ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளி மாணவிகள் வெற்றி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 ஆகஸ்ட், 2025

பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் திருப்புத்தூர் ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளி மாணவிகள் வெற்றி


 பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் திருப்புத்தூர் ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளி மாணவிகள் வெற்றி


பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட  அளவிலான சிலம்பப் போட்டிகள் சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளியின் நான்கு மாணவியர் அவர்கள் பயின்ற பள்ளியின் சார்பாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளி மாணவியும், திருப்புத்தூர் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவியுமான ப்ரீத்தி இரட்டைக் கம்புப் பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநிலப் போட்டிக்குத் தேர்வானார். மேலும் அதே பள்ளியில் பயிலும், ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளி மாணவிகள், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி சர்விகா தொடு வரிசைப் போட்டியில் இரண்டாம் இடத்தையும், ஒன்பதாம் வகுப்பு மாணவி நித்ய ஹர்ஷினி மூன்றாம் இடத்தையும், பத்தாம் வகுப்பு மாணவி ஜெயதாரணி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை ருத்ரன்ஷா சிலம்பப் பள்ளியின் ஆசான் நமசிவாயம், பயிற்சியாளர்கள் லதா நமசிவாயம், சுந்தரமூர்த்தி, சுந்தரமணி மற்றும்  பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad