தமிழக அரசு சார்பில் தஞ்சை கலெக்டருக்கு சிறப்பு விருது வழங்க தேர்வு : காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் பாராட்டு
தமிழ்நாட்டின் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவராக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பா பிரியங்கா பங்கஜம் அவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு விருது வழங்க தேர்வு செய்துள்ளது. சீர்மிகு தஞ்சையின் சிறப்புமிக்க மாவட்ட ஆட்சித் தலைவரை தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ கே ஆர். ரவிச்சந்தர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க செயலாளர் முனைவர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் எழுதிய "இறையன்பு ஓராண்டு உரைகள்"என்கிற நூலை வழங்கி மாவட்ட ஆட்சியரை பணி சிறக்க பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக