மாற்று திறனாளியின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய நல்லதம்பி எம் எல் ஏ!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 21 -
திருப்பத்தூர் மாவட்டம் சட்டமன்ற தொ குதி, திருப்பத்தூர் நகரில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்க வந்த முதியவர் ஒருவர் தம் மால் நடக்க இயலாது சூழ்நிலையையும், தனக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை கனிவுடன் கேட்ட திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A.நல்லதம்பி உடனடியாக அதிகாரிகளை அழைத்து அவருக்கு மூன்று சக்கர சைக் கிள் வழங்க ஏற்பாடு செய்தார்தம்முடைய கோரிக்கையை கனிவுடன் கேட்டு உடனடி தீர்வு கண்ட சட்டமன்ற உறுப்பினருக்கு அந்த பெரியவர் இறைவனிடன் துவா செய்து நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொண்டார்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக