தகவல் அறியும் உரிமை சட்டம்:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-யின் கீழ், மாநில தகவல் ஆணையர்கள் தலைமையில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ .ஆ .ப அவர்கள் முன்னிலையில், அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது துறை அலுவலர்கள் பராமரிப்பு பதிவேட்டில் மனு பெறப்பட்ட நாள் மனு பதிவு செய்யப்பட்ட நாள் மனுவின் மீது தீர்வு கண்ட நாள் மனுதாரருக்கு தகவல் வழங்கிய நாள் ஆகியவற்றை குறிப்பிடவேண்டும் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக விசாரனை மேற்கொள்ள பொது தகவல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது மனுதாரர் அளிக்கும் மனுவை நன்றாக படித்து சரியான பதிலை மனுதாரர்களுக்கு 30 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும் நீங்கள் அளிக்கும் பதில்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சதீஸ்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உல்பட பலர் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக