நீலகிரி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை திருக்குறள் நுண்பயிற்சி வகுப்பு
நீலகிரி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக திருக்குறள் திருப்பணிகள் நுண் பயிற்சி வகுப்பு உதகை காந்தல் பெனட் மார்க்கெட்டில் அமைந்துள்ள அய்க்கூ கல்வி பயிற்சி மையத்தில் நடைபெற்றது. மருத்துவர் முகமதுஈசா அனைவரையும் வரவேற்றார். இதில் திருக்குறள் நன்னெறி கருத்துகள் குறித்தும், மானிட வாழ்வில் வளம்பெறுதல், வாழ்வியல் நெறிகள் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.
திருக்குறள் முற்றோதல் பயிற்சியை திருக்குறள் பயிற்றுநர்கள் புலவர் இர.நாகராஜ் மற்றும் கு.விஜயலட்சுமி பயிற்சி வழங்கினர். இதில் 60 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சிப் பெற்றனர். அசினா நன்றி கூறினார். ஆசிரியர் நிஃபா நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக