அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்புக் குழுவின் சார்பாக விழிப்புணர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்புக் குழுவின் சார்பாக விழிப்புணர்வு


அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்புக் குழுவின் சார்பாக விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன


தமிழக அரசின் ஆணைக்கிணங்க போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வின் ஒரு பகுதியாக அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்புக் குழுவின் சார்பாக பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாணவ மாணவியர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் அப்பகுதியில் இருந்த பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி போதைப் பொருள் ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 


இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நிலோபர் பேகம், முனைவர் வேலாயுதராஜா, முனைவர் ராமசாமி, முனைவர் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் போதைப் பொருள் ஒழிப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்  முனைவர் சரவணன் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad