சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் சார்பாக நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வுப் பயிலரங்கு கல்லூரியின் உமையாள் கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வரலாற்றுத் துறைத்தலைவர் முனைவர் நிலோபர் பேகம் தலைமை வகித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி புவியமைப்பியல் துறைத்தலைவர் முனைவர் உதய கணேசன் வரவேற்புரை ஆற்றினார். இந்திய செஞ்சிலுவைச் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவர் நல்லாசிரியர் சுந்தரராமன் முன்னிலை வகித்தார். அழகப்பா பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் விநாயகமூர்த்தி மற்றும் இளையோர் செஞ்சிலுவைச்சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பரிதாபேகம், சிவகங்கை மாவட்ட இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ரத்ததான ஒருங்கிணைப்பாளர் செங்கையா ராமசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அபுதாபி நாட்டு மேனாள் வணிக வங்கி அதிகாரி குமார் முத்தையா நிதிக்கல்வி என்ற தலைப்பில் சேமிப்பு குறித்தும், வங்கியில் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் குறித்தும் விளக்கிப் பேசி நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பாரதி ராணி நன்றி கூறினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பங்கேற்று சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக