ஸ்ரீமுஷ்ணம் கீழா வன்னியர் தெருவில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீஅஷ்டபுஜ காளியம்மன் கோவில் செடல் திருவிழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 2 ஆகஸ்ட், 2025

ஸ்ரீமுஷ்ணம் கீழா வன்னியர் தெருவில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீஅஷ்டபுஜ காளியம்மன் கோவில் செடல் திருவிழா


ஸ்ரீமுஷ்ணம் கீழா வன்னியர் தெருவில் எழுந்தருளிருக்கும் ஸ்ரீஅஷ்டபுஜ காளியம்மன் கோவில் செடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது 


ஸ்ரீமுஷ்ணம் ஆக 03 கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கீழ வன்னியர் தெருவில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அஷ்ட பூஜ காளியம்மன் கோவில் செடல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது வருடம் வருடம் ஆடி மாதம் முதல் தேதியில் அஷ்ட பூஜா காளியம்மனுக்கு பால்குடம் எடுக்கப்படும் அதேபோல் இந்த ஆண்டும் ஆடி மாதம் முதல் தேதியில் ஸ்ரீஅஷ்டபுஜ காளியம்மனுக்கு பால்குடம் எடுக்கப்பட்டு நான்கு வீதிகளில் சுற்றி வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து ஆடி மாதம் முதல் அம்மாவாசையில்  அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது பக்தர்கள் திருக்குளக்கரைச் என்று கையில் காப்பு கட்டி கொண்டனர் பத்து நாள் திருவிழா என்பதால்  அம்மன் ஒவ்வொரு நாளும் வீதியுலாவும் ஒன்பதாம் நாள் முத்து பல்லாக்கில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தபடியே வீதி உலாவும் நடைபெறும் பத்தாம் நாள் பக்தர்கள் கோவிலில் செடல் அணிந்து கடை வீதி வழியாக சுற்றி ஆலயத்தில் வந்து தங்களது நேத்தி கடனை செலுத்தினார்கள் இதில் ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad