எமரால்டு அண்ணா திடலுக்கு முன்பாக நிறுத்தப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி அதிரடி காட்டும் எமரால்டு காவல்துறையினர்
எமரால்டு பஜார் பகுதியில் உள்ள அண்ணா திடலுக்கு முன்பாக வாடகை ஓட்டுநர்கள் வாகனங்களை நிறுத்துவதாலும் மற்ற வாகனங்களுக்கு இடம் இல்லாத காரணத்தினால் வாகனங்களை வளைவில் நிறுத்தி செல்கின்றனர் இதனால் மாலை ஏழு மணி அளவில் வரும் குன்னூர் பேருந்து திருப்ப முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் அதேபோன்று காலை மற்றும் மாலை குழந்தைகளை ஏற்றி இறக்க வரும் பள்ளி பேருந்துகளும் இந்த இடத்தில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்
இந்நிலையில் எம்ஜிஆர் நகர் ஊர் பொது மக்களின் நலன் கருதியும் மற்றும் பொதுமக்கள் பள்ளி குழந்தைகளை நலனுக்காகவும் எமரால்டு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வளைவுகளில் நிற்கும் வாகனங்களுக்கு டயர்களில் பூட்டு பூட்டிவிட்டு சென்றுள்ளனர் இது போன்று இனி வாகனங்கள் நிறுத்தினால் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் காவல்துறையின் சார்பாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
அதேபோன்று எமரால்டு அண்ணா திடலில் உள்ள டீபோர்டு வாகனங்களும் தங்களது வாகனங்களை சரியாக நிறுத்தவில்லை எனில் அவர்களுக்கும் இந்த நிலை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்
எமரால்டு காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஊர் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர் அவர்களுடன் தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாகவும் காவல்துறைக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக