கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட மக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் 1 - முதல் எட்டு வரை உள்ள வார்டுகளுக்கும் நேற்று நடைபெற்றது.
சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் நடைபெற்ற இம்முகாமில், பொதுமக்களின் மக்கள் குறை தீர்க்கும் நலனுக்காக நடைபெற்ற இந்த முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக கிழக்கு மாவட்டப் பொருளாளர் எம். ஆர். கே .பி . கதிரவன் திட்ட முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி சேத்தியாத்தோப்பு திமுக நகரச் செயலாளர் பழனி மனோகரன் மற்றும் புவனகிரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஏ .எம் . மதியழகன் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்றத் தலைவர் தங்க. குலோத்துங்கன்,புவனகிரி வட்டாட்சியர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் உமா மஹேஸ்வரி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.கடலூர் கிழக்கு மாவட்டப் பொருளாளர் எம் .ஆர். கே .பி. கதிரவன் பேசுகையில் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின்,தலைமையிலான நான்காண்டு நல்லாட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். இம்முகாமில் வார்டு கவுன்சிலர்கள் கலைவாணன்,ஜெயக்குமார் ,செந்தில்,சாந்தா திருமாவளவன், செந்தில்குமார்,விநாயகமூர்த்தி,கீதாபழனி, மற்றும் ஒன்றியப் பொருளாளரும்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான செல்வராசு, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மலர்விழி சரவணன்,தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி அருள்அரசி கருணாநிதி,மாவட்ட பிரதிநிதி தளபதி ப்ரியன் ஆகியோர் கலந்து கொண்டனர். உங்களுடன் ஸ்டாலின் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மகளிர் உதவித்தொகை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, பட்டா மாற்றுதல்,முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை முகவரி மாற்றம், ஆதார்திருத்தம், முதலமைச்சரின் பெண் குழந்தைகளின் பாதுகாப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைக்கான மனுக்களை பொதுமக்கள் இந்த முகாமில் அதிகாரிகளிடம் வழங்கினர்.
மருத்துவக் குழுவினர், செவிலியர்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துப் பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகி செந்தில்நாதன், இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் எம் ஆர் கே சர்க்கரை ஆலையின் தொழிற்சங்கத்தலைவர் ராஜாராம் நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக