டெம்போ ஓட்டுனர்களும் இந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் தான். அவர்களும் வாழ்க்கை நடத்த வேண்டும். தேவையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். கடன் பட்டு, கஷ்டப்பட்டு வாகனங்களை வாங்குகின்றனர்.
அதற்கான கடன்களை செலுத்த முடியாமல் சிரமப்படுவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
இது மட்டுமல்ல, மாதம்தோறும் கடன் தொகை செலுத்தாத பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்து விடுகின்றனர். இதனால் குடும்பமே நடுத்தெருவுக்கு வரும் சூழ்நிலை உருவாகும். கல், மணல் ஏற்றி வரும் போது அதிகாரிகளுக்கு பயந்து, ஒளிந்து வாகனங்களை இயக்குவது அன்றாட நிகழ்வாகி விட்டது.
ஆங்காங்கே விபத்து நடந்தால் மேலும் விபத்துகள் உருவாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர வாகனங்கள் ஓட்டுவதை தடை செய்தல் கூடாது. அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வாழ்வாதாரத்தை சூறையாட கூடாது.
இன்றைக்கு கட்டுமான பொருட்கள் விலை உயர்வுக்கு அதிகாரிகளின் இந்த நடவடிக்கையும் ஓர் காரணமாகி விட்டது. சாதாரண மக்களுக்கு ஒரு வீடு என்பது கனவாக உள்ளது. சாமானியர்களுக்கு இது எட்டாக்கனியாக மாறி விட்டது.
கல், மணல் ஏற்றி வரும் வாகனங்களுக்கான நேரத்தை மாற்றியமைத்து ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எதையும் நடத்திக் காட்ட வேண்டும் தடுத்து நிறுத்த அரசும், அதிகாரிகளும் தேவையில்லை என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.
பேட்டியின் போது கலப்பை மக்கள் இயக்க மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாவட்ட மருத்துவ அணி தலைவர் நலம் வேண்டும். அஞ்சுகிராமம் வட்டார தொழிலாளர் சங்க தலைவர் சுனேஷ், துணை தலைவர்கள் செல்வகுமார், ஜோஸ், மிக்கேல், அனிஷ், செயலாளர் சிவகுமார், பொருளாளர் நடராஜன் மற்றும் அகஸ்தீஸ்வரம் வட்டார வாகன உரிமையாளர், ஓட்டுனர்கள் சங்கத்தினர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக