சிவகங்கையில் மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழு குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தினர் சந்திப்பு.
திருப்பூரில் மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழு வருகிற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதையொட்டி சிவகங்கையில் உள்ள வீரமங்கை வேலு நாச்சியார் மற்றும் குயிலி ஆகியோரின் நினைவிடத்தில் புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் நீ. இளங்கோ அவர்கள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் கொடியை வழங்க, அதனை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தோழர் செல்வகுமார் அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய சங்கத்தின் மாநிலபொதுச் சொயலாளர் தோழர் சங்கர சுப்பிரமணியன், மற்றும் முன்னாள் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ், ICDES சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் வாசுகி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து காளையார்கோவிலில் உள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் இருந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சுப்பிரமணியன் அவர்கள் சங்க கொடியை எடுத்துக் கொடுக்க அதனை மாநிலத் துணைத் தலைவர் தோழர் மு. செல்வகுமார் பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக