திருப்பூரில் தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக இரத்த தானம் முகாம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

திருப்பூரில் தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக இரத்த தானம் முகாம் நடைபெற்றது


திருப்பூர் மாவட்ட TNTJ சார்பாக மங்கலம பகுதியில் 79 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர் சிக்கந்தர் மற்றும் மாவட்ட செயலாளர் அன்சர் MISC பொருளாளர் அப்துல் ரஜாக் மாவட்ட துணை தலைவர் யாசர் அராபத் துணைசெயலாளர் பல்லடம் மீரான் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கிளை தலைவர் நஜீர்  செயலாளர் ஜான்பாஷா பொருளாளர் அன்வர் மற்றும் பிலால் தவ்பீக் முஸ்தபா பாயஸ் ராசித் யாசர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் 60 க்கு மேற்பட்டோர் பங்கேற்று 41நபர்கள் இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் அளித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad