திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்


 திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் 19-8-2025 (செவ்வாய்க்கிழமை) நடை பெற உள்ளது. இந்த சிகிச்சை பயிற்சி பெற்ற சிறந்த மருத் துவ நிபுணர்களை கொண்டு 10 நிமிடங்களில் இலவசமாக செய்யப்பட உள்ளது. கத்தியின்றி, ரத்தமின்றி எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் செய்யப்படும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் ஆண்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,100-ம், கலெக்டர் ஊக்கத்தொகையாக ரூ.1,000-ம் உள் பட மொத்தம் ரூ.3 ஆயிரத்து 100 வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

இந்த சிகிச்சையை ஏற்பதால் இல்லற வாழ்க்கையின் மகிழ்ச் சிக்கோ, கடின உழைப்புக்கோ தடை ஏதும் ஏற்படாது. பெண்களுக்கு செய்யப்படும் குடும்ப நல அறுவை சிகிச் சையை விட பலமடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. மேற் கண்ட தகவலை திருப்பூர், கோவை மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் கவுரி தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad