திருப்பூரில் ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டுக்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

திருப்பூரில் ஆட்டோவில் பிரசவம் பார்த்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்



சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் திருமுருகன் பூண்டி ரிங் ரோடு பகுதிகளில் நள்ளிரவு வரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அதே சமயம் ஒரு ஆட்டோவில் வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் உடனே பிரசவம் ஆகும் நிலையில் துடித்து  கொண்டிருந்தார் அப்போது அங்கு பணியில் இருந்த பெண் காவலர் கோகிலா தனது செவிலியர் அனுபவத்தை  கொண்டு ஆட்டோவில் அந்தப் பெண்ணுக்கு  பாதுகாப்பாக பிரசவம் பார்த்தார் சில நிமிடங்களில் அந்த வட மாநில பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர் தாயையும் குழந்தையையும் காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த போற்றுதலுக்குரிய செயலை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் இகாப

அவர்கள் காவலர் கோகிலாவை நேரில் அழைத்து பாராட்டினார்

ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த  காவலர் கோகிலா நர்சிங் படித்துள்ளார் இதனால் உடனடியாக பெண்ணுக்கு பிரசவம் பார்க்க முடிந்தது  காவலர் கோகிலா அவர்களுக்கு பொதுமக்கள் அதிகாரிகள்  பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad