முன்னாள் துணை வேந்தரும் கல்வி யாளருமான முனைவர் வசந்தி தேவி மறைவுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இரங்கல்!
வேலூர் , ஆகஸ்ட் 2 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாட்டின் முக்கிய மான கல்வியாளராக, பெண்ணியவா தியாக, சமூக ஆர்வலர் ஆவாராக திகழ் ந்த வசந்தி தேவி (Vasanthi Devi 1938-2025) அவர்கள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம் அன்னாரின் மறைவுக்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக்கொள்கின்றோம் இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனா ர்த்தனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது வசந்தி தேவி அவர் கள் ராணி மேரி கல்லூரியில் பேராசிரிய ராக பணியாற்றினார், 1988 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கும்பகோ ணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரி யின் முதல்வராக பொறுப்பு வகித்தார்.
1992-1998 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும், 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடை யில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணை யத்தின் தலைவராகவும் இருந்தார். பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வி சீர்திருத்தம் என்கிற துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
அன்னாரின் மறைவு கல்வித்துறைக்கே மிகப்பெரிய இழப்பாகும் மிகச்சிறந்த கல்வியாளர் இழந்து தவிக்கின்றோம். அன்னாரின் மறைவுக்கு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்விலும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித் துக்கொள்கின்றோம்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக