கோத்தகிரி போட்டோ வீடியோ சங்க கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

கோத்தகிரி போட்டோ வீடியோ சங்க கூட்டம் நடைபெற்றது


கோத்தகிரி போட்டோ வீடியோ சங்க கூட்டம் நடைபெற்றது.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி போட்டோ வீடியோ கலைஞர்கள் சங்கத்தின் கலந்தாய்வு ஆலோசனை  கூட்டம் 13.08 .2025 புதன் அன்று கோத்தகிரி எடச்சேரி ஹாலில்  நடைபெற்றது. இதில் தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலும் செயலாளர் திரு. செல்வம் அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது 


முன்னதாக  சங்க உறுப்பினர் மற்றும் சங்கத்தின் குடும்பத்தார் மரணம் அடைந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 


கூட்டத்தில் பொருளாளர் திரு. சுந்தர்ராஜ் அவர்கள் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார்


பின்னர் அனைவரும் பேசுகையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்றும் அதன்படி நலவாரியம் அனைத்து உறுப்பினர்களுக்கும் 20 நாட்களுக்குள் செய்து தரப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நல வாரியத்திற்கு தேவைப்படும் ஆவணங்கள் அனைத்தும்  உறுப்பினர்களிடம் பெறப்பட்டு  அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .


பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இக்கூட்டத்தில் துணைத் தலைவர்  திரு. செளந்தரராஜ் மற்றும் துணைச் செயலாளர் திரு.  ஸ்டீபன்  செயற்குழு நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இக்கூட்டத்தை திரு. ஸ்டீபன் அவர்கள்  சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்  திரு. காட்வின் அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.  


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad