மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில், நெமிலி ஒன்றிய சேர்மேன் பயனாளிகளு க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கல்!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 5 -
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோ ணம் வட்டம், மின்னல் ஊராட்சி, சாலை கைலாசபுரம் பஸ் நிலையம் அருகில் தனியார் திருமண மண்டபத்தில், தமிழ் நாடு அரசின் இராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர சிறப்பு முகாம், மாவட்ட மாற் றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜி.வச ந்த ராம்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மின்னல் ஊராட்சி மன்ற தலைவர் கோபி முன்னி லை வகித்தார்.முகாமில் சிறப்பு அழைப் பாளராக, நெமிலி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வடிவேலு அவர்கள்
கலந்து கொண்டு, முகாமில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, அரசு சலுகைகள் பெறுவதற்கான ஆணைகள் மற்றும் சக்கர நாற்காலி, உட்பட பல்வேறு அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.
முகாமில் நெமிலி, அரக்கோணம், சோளி ங்கர், காவேரிப்பாக்கம் ஆகிய ஒன்றியங் களுக்கு உட்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய பெருந்தலைவர் உணவு வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராம லிங்கம், நெமிலி கிழக்கு ஒன்றிய அவை த்தலைவர் புருஷோத்தமன், மிட்டப்பேட் டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புரந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக