புவனகிரி அருகேயுள்ள தெற்குத்திட்டை கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

புவனகிரி அருகேயுள்ள தெற்குத்திட்டை கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ளது தெற்குத்திட்டை கிராமம்.இப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலய 56 ம் ஆண்டு தீமிதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கிய திருவிழாவில் நாள்தோறும் மஹாபாரதத்தை மையப்படுத்தி பல்வேறு நாடகங்கள், பூஜைகள் ,வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட காப்பு கட்டிய பக்தர்கள். புனித நீராடி அலங்கரிக்கப்பட்ட அக்னி கரகம், பூங்கரகத்துடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியே மேள தாளங்களுடன் வலம் வந்து ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இதில் ஆண்கள் பெண்கள் என 200க்குமேற்பட்டோர் தீக் குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad