தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெரியக் கரும்பாலம் டபுள் போஸ்ட் பகுதியில் வசித்து வருபவர் டொமினிக் வயது 54 இவர் மாற்றுத்திறனாளி என்று கூறப்படுகிறது இவர்மனைவி பக்கா சூரா மலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவர்களுக்கு ஒரு மகளும் உண்டு இந்த நிலையில் காலை வேளையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனைவியும் அவரது மகளும் சேலாஸ் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து கரும்புகை வருவதாக அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததின் பெயரில் குன்னூர் தீயணைப்பு துறையினரும் 108 ஆம்புலன்ஸ்க்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர் இவர்கள் உடனடியாக விரைந்துவந்து தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்தும் ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது பெட்ரூமில் இருந்து டோமினிக் உடல் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது பின்பு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன மேலும் டோமினிக் மரணம் குறித்து கேத்தி காவல்துறையினர் கொலையா? அல்லது தற்கொலையா? மின்கசிவா? என்ற பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குன்னூர் செய்தியாளர் சந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக