கூடலூர் மின்சார வாரிய பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

கூடலூர் மின்சார வாரிய பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்


கூடலூர் மின்சார வாரிய பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


தமிழ்நாடு மின்சார வாரியம் கூடலூர் மின்பகிர்மான கோட்டம் - இந்திய செஞ்சிலுவை சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். தேவர்ஷோலை உதவி மின்பொறியளர் ஹரி முன்னிலை வகித்தார்.


கூடலூர் கோட்ட மின் செயற்பொறியாளர் முத்துகுமார் முகாமினை துவக்கி வைத்தார். 


இந்திய செஞ்சிலுவை சங்க மருத்துவ குழுவினர் மருத்துவர் ஜெய்னப்பாத்திலா, செவிலியர் சுமதி, மருந்தாளுனர் நவீன், நிர்வாக உதவியாளர் லாய்சான் அடங்கிய மருத்துவ குழுவினர் இரத்த அழுத்தம், எடை, இரத்த சர்க்கரை அளவு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர் இலவச மருந்துகளும் வழங்கப்பட்டது.


முகாமில் கூடலூர் மின்சார வாரிய பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முகாமிற்கு ஏற்பாடுகளை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் மின்சார வாரியத்தினர் செய்து இருந்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad