இங்கிலாந்து,ஸ்வீடன் ,இந்தியா உள்ளிட்ட 51 நாடுகளை சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்ற உலக நடன கோப்பை ஸ்பெயினில் நடைபெற்றது.
8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சர்வதேச போட்டி நிகழ்வுகள் 12 நாட்கள் நடைபெற்றது.
இதில் ஹிப் ஹாப் பிரிவில் ஸ்வீடனை சேர்ந்த பேபியோ தங்கப் பதக்கத்தை வென்றார்.
இந்திய நடன கலைஞர் குமரி மாவட்டம் வில்லுக்குறி அடுத்த குழுமைக்காடு பகுதியை சேர்ந்த சுவாமிதாஸ், அகிலா தம்பதி மகன் சுபில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
வெள்ளி பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த சுபினை அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் பாராட்டி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர்.
தா.ராஜேஷ்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக