அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளின் உடல் நலன் கருதி கன்னியாகுமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், அகஸ்தீஸ்வரம் முதல்நிலை பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர்மான குமரி. தா.ஆதிலிங்க பெருமாள் தனது சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார்
பள்ளியில் அந்த இயந்திரத்தை நிறுவி அதிலிருந்து வந்த சுத்தமான குடிநீரை அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர். ராமச்சந்திரன் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு கொடுத்து தொடங்கி வைத்த நிகழ்வு
இந்த நிகழ்வில் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை. ஸ்ரீதேவி கல்வி மேலாண்மை குழு தலைவி. ரதி,அரசு மேல்நிலைப்பள்ளி கல்வி மேலாண்மை குழு தலைவி. சாந்திரமேஷ், கல்வி மேலாண்மை குழு உறுப்பினர்கள.
செல்வ சுப்பிரமணியன், தொடக்கப்பள்ளி ஆசிரியர்.நாகராஜன், சத்துணவு அமைப்பாளர்.ராதிகா, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி துணைத் தலைவி.சரோஜா முருகேசன், முன்னாள் மாணவர்கள் கிங்ஸ்லி, சேகர், ஆரோக்கிய ராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமாரி மாவட்ட செய்தியாளர். என். சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக