திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டு பகுதிகளிலும், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும், முதியவர்கள், சிறுவர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மீது தெரு நாய்கள் அச்சுறுத்தல் விளைவித்து வருவதாகவும், தாராபுரம் பகுதி பொதுமக்கள், தாராபுரம் பத்திரிக்கையாளர் சங்கத்தின் வாயிலாக, அவர்களது வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டனர்.
அதன் அடிப்படையில், தாராபுரம் பத்திரிகையாளர் சங்க தலைவர் திரு. கே. கருணாநிதி, செயலாளர் திரு.காஜா மைதீன் ஆகியோர் முன்னெடுப்பில், மதிப்புக்குரிய தாராபுரம் நகராட்சி ஆணையாளர் திரு. முஸ்தபா அவர்களை நேரில் சந்தித்து, பொதுமக்களின் கருத்துக்களையும், தற்போது தாராபுரத்தில் நாய்களால் ஏற்படும் தொந்தரவுகள் பற்றியும், இதனை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆணையாளர், நீதிமன்ற உத்தரவுகள் வந்த பிறகு அதன் வழிமுறைகளை பின்பற்றுவதற்கு நகராட்சி தயாராக இருப்பதாகவும், தாராபுரம் பகுதியில் சுற்றித் திரியும் ஆயிரக்கணக்கான நாய்களுக்கு தடுப்பூசி (வெக்சின்) செலுத்தி, கடிக்கும் வீரியத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், ப்ளூ கிராஸ் தன்னார்வலர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் முழு ஒத்துழைப்புடன், இருந்தால் நன்றாக இருக்கும் எனவும். மேலும் நாய்களுக்கு இனப்பெருக்கக் குறைப்பு அறிவி சிகிச்சை செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், டெண்டர் எடுக்கும் நிறுவனம் நகராட்சியை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறினார்.
நாய்களைப் பிடிப்பதில் பல்வேறு சட்டப்பிரச்சனைகள் இருப்பதால், அவற்றை ப்ளூ கிராஸ் விதிமுறைகளுக்கு உட்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் உறுதி அளித்தார்.
பின்னர், தாராபுரம் கால்நடைத்துறை உதவி இயக்குநர் திரு. ராஜமாணிக்கம் அவர்களையும், பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையை வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த அவர், நாய்களுக்கு அறிவி சிகிச்சை செய்ய பல்வேறு விதிமுறைகள் உள்ளன, அந்த விதிமுறைகளின் படி அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களின் உத்தரவின் பேரில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
தெரு நாய்கள் பிரச்சினையை கட்டுப்படுத்த, தாராபுரம் பத்திரிகையாளர் சங்க தலைவர் கருணாநிதி, செயலாளர் காஜா மைதீன், செயற்குழு உறுப்பினர் ஜாபர் சாதிக், உதவி செய்தித் தொடர்பாளர் கவியரசு ஆகியோர் முன்னெடுப்பில் பணிகள் தொடங்கியுள்ளதாக, சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக