ஸ்ரீவைகுண்டம் ஆகஸ்ட் 16. நவதிருப்பதி களில் ஒன்றான இரட்டை திருப்பதி அருகில் உள்ள அப்பன் கோவிலில் கடந்த மூன்று நாட்களாக பவுத்ரோத்ஸவம் நடந்தது.
தினமும் நடைபெறும் பூஜைகளில் ஏதேனும் விடுதல்கள் இருந்தால் அதனை நிறை செய்யும் பொருட்டு நடைபெறுவது பவுத்ரோத்ஸவம் ஆகும். நிறைவு நாளான இன்று காலை விஸ்வரூபம். திருமஞ்சனம். ஹோமம் நடந்தது.
10.30 மணிக்கு சேவா காலம். 11.30 மணிக்கு பூர்ணாகுதி. பவுத்ர மாலைகள் படிகளையப் பெற்று மந்திராட்சதை. தீர்த்தம். சடாரி. பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.இநிகழச்சியில் அரையர் சம்பத். சாரங்கன்
திருக்குறுங்குடி பேரருளாள ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள். திருமலாச்சாரியார். மதுரகவி.கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக