பனியன் நகரம் குப்பை நகரமாக மாறிவிட்டது நாற்றம் தாங்க முடியவில்லை பொதுமக்கள் புகார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

பனியன் நகரம் குப்பை நகரமாக மாறிவிட்டது நாற்றம் தாங்க முடியவில்லை பொதுமக்கள் புகார்


அழகிய பனியன்கள் தயாரிக்கும் திருப்பூர் நகரம் அழுகிய குப்பைகள்  தேங்கும் நகரமாக மாறிவிட்டது 

ஸ்மார்ட் சிட்டியான திருப்பூர் மாநகராட்சியில்

குப்பை மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது தினமும் சுமார் 700 டன் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுகிறது ஆனால் அதை அள்ளி சேகரித்து வேறு பகுதியில் கொட்டுவதற்கு வாய்ப்பு இல்லாமல் திருப்பூர் மாநகராட்சி தள்ளாடி கொண்டிருக்கின்றது எங்கு சென்றாலும் கைவிடப்பட்ட கல் குவாரிகளில் பொதுமக்கள் குப்பையை கொட்ட எதிர்ப்பு தெரிவிப்பதால் மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துப் போய் உள்ளது இதனால் திருப்பூர் மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் பள்ளிக்கூடங்கள் அருகிலும் குப்பை மேடுகள் குவிந்துள்ளது துர்நாற்றம் வீசுகின்ற காரணத்தால் பொதுமக்கள் தொற்று நோய் ஏற்படும் என்று அச்சத்தில் உள்ளனர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகள் தரம் பிரித்து வீடுகளில் வாங்கிக் கொண்டிருந்த திட்டத்தை இப்போது கிடப்பில் போட்டுள்ளது திருப்பூர் மாநகராட்சி இதனால் பொதுமக்கள் பெரிதும் கோபத்தில் உள்ளது கண்கூட காண முடிகிறது குப்பைக்கு என்ன தீர்வு சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது விரைந்து நடவடிக்கை எடுக்குமா திருப்பூர் மாநகராட்சி இதுவே பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad