தாராபுரத்தில் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டம் பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் கொடி ஏற்றம் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தின விழாவையொட்டி, தாராபுரம் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.
புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் திரு. கே. கருணாநிதி அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி, தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் காஜாமைதீன், கௌரவத் தலைவர் மன்சூர் அகமது, செய்தி தொடர்பாளர் கிருபாகரன், உதவி செய்தி தொடர்பாளர் கவியரசன், செயற்குழு உறுப்பினர் ஸ்டுடியோ பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுதந்திர தின ஏற்பாடுகளை சங்க செயற்குழு உறுப்பினரும் தாஜ் பிரியாணி ஹோட்டல் உரிமையாளருமான திரு. ஜாபர் சாதிக் சிறப்பாக மேற்கொண்டார்.
மேலும், சமூக ஆர்வலர் சிவசங்கர், தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மண்டல துணைச் செயலாளர் ஒண்டிவீரன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்கள், பூக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக