சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நிலோபர்பேகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வசந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நிலோபர்பேகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்போடு நடைபெற்ற இவ்விழாவில் கொடிப் பாடல் பாடப்பட்டு, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில் பேராசிரியர்களும் மாணவ மாணவியரும், அலுவலகப் பணியாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் முனைவர் அசோக்குமார், தேசிய மாணவர் படையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி, தெய்வமணி செந்தில்குமார், லட்சுமண குமார், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வமீனா , நுண்கலை மன்ற உறுப்பினர்கள் முனைவர் சர்மிளா, லெட்சுமணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக