இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் 

 இராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பாரதிநகர் 3 தெருவில் உள்ள மக்கள் சட்ட உரிமைகள் கழகம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் 02.08.2025 அன்று மாலை 5 மணிக்கு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது 


பேரிட மீட்பு அணி மாநில துணைச் செயலாளர் சாமிஅய்யா,ஆட்சிமன்ற குழு உறுப்பினர் முஸ்தபா மாநில நிர்வாகி அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வரும் ஆகஸ்டு 15 ம் தேதி சுதந்திரதின விழா வழக்கம் போல கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடத்துவது பற்றியும் பொது மக்கள் சார்ந்த பிரச்சினைகள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவாக கொடுத்து தீர்வு காண்பது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள். கிழக்கு துணைச்செயலாளர் நாகராஜன்,கிழக்கு மாவட்ட துணைச்செயலாளர் ஜான்கென்னடி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கணபதி,பசுமைபுரட்சி அணி செயலாளர்.கணேசன்,கல்வி அணி துணை செயலாளர்,வீரபாண்டியன்,சுற்றுசூழல் அணி செயலாளர் ஆறுமுகம்,பனைக்குளம் ராவுத்தர் நைனா முகமது,பத்திரிகையாளர் அணி செயலாளர் ரமேஷ்,போக்குவரத்து அணி துணை செயலாளர் லோகநாதன்,மண்டபம் ஒன்றிய செயலாளர் முருகன், துணை செயலாளர் ஹிதாயத்துல்லா,மற்றும் பெருங்குளம் அறிவழகன்,தாமரை ஊரணி முருகானந்தம் (எ)செல்வம்,குணசேகரன்,ஜோசப்ஸ்டாலின்,உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad