தூய மோட்சராக்கினி பேராலய 187 வது ஆண்டு விழா துவக்கம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

தூய மோட்சராக்கினி பேராலய 187 வது ஆண்டு விழா துவக்கம்


தூய மோட்சராக்கினி பேராலய 187 வது ஆண்டு விழா துவக்கம்

நீலகிரியின் முதல் கத்தோலிக்க தேவாலயமான தூய மோட்சராக்கினி பேராலயத்தின் 187 வது ஆண்டு விழா ஆடம்பர கொடியேற்றத்துடன் துவங்கியது .

   


3 ஆம் தேதி ஞாயிற்று கிழமை காலை 9 மணி சிறப்பு திருப்பலியை ஊட்டி பிங்கர் போஸ்டில் வீற்றிருக்கும் புனித திரெசன்னை ஆலய பங்கு குரு ஹென்றி ராபர்ட்  தலைமையில் பங்கு குரு பெனடிக்ட்  அருட்பணி ஞானதாஸ் , உதவி பங்கு குரு டினோ பிராங்க் சிறப்பித்தனர் 

  


திருப்பலிக்கு பின் ஆலயத்தில் இருந்து திருவிழா கொடி  தூய மோட்சராக்கினி திரு சுரூபம் பவனியாக எடுத்து வரப்பட்டு .

  

பேண்ட் மாஸ்டர் ஆல்ட்ரின்,  பிராங்க் , அருண் மற்றும் அனிதா  வழிநடத்துதலில் ஐம்பது சிறுவர் சிறுமியர் இசையில் அன்னைக்கு வரவேற்பு இசையுடன் ஆலயத்தை சுற்றி பவனியாக அன்னையின் திரு கொடி எடுத்து வரப்பட்டு .

 

அருட்தந்தை .ஹென்றி ராபர்ட் கொடியை புனித படுத்தி ஏற்றிவைத்தார்  கொடியை அன்னைக்கு  காணிக்கையாக டேனியல் குடும்பத்தார் வழங்கினர் .

  

ஆலய பீடம் முழுவதும் மலர் அலங்காரம் காணிக்கையாக வழங்கினார் சாக்லேட் பாபு  குடும்பத்தார் .


  4 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் தினமும்   மாலை  சிறப்பு ஜெபமாலை  நவநாள் மறையுரை திருப்பலி நடைபெறுகிறது .

  

குருக்கள் அமல்ராஜ் , அந்தோணி டேவிட் ,லியோ சேவியர் ,  பிரான்சிஸ் சேவியர் , அடைக்கலம் அமிர்தராஜ் , ஜெயக்குமார் , வின்சென்ட் , வில்லியம் , கிங்ஸ்டன் ,மற்றும் திண்டுக்கல் இயேசு சபை தலைவர் விக்டர் ஆகியோர் நிகழ்த்துகிறார்கள் .


15 ஆம் தேதி  அன்னையின் விண்ணேற்பு பெரு விழா , பங்கின் திருவிழா நாட்டின் சுதந்திர விழா என்று முப்பெரும் விழாவை மறைமாவட்ட  முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் , ஆயர் செயலர் இம்மானுவேல் அந்தோணி  ,சிஜோ ஜார்ஜ் எடக்குடியில் மற்றும் ரிச்சர்ட்  சிறப்பிக்கின்றனர் மாலை அன்னையின் ஆடம்பர தேர் பவனி நடைபெறும் .

  

அனைத்து ஏற்பாடுகளை பங்கு குருக்கள் , இளைஞர் குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர் .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad