இராமநாதபுரம் ஏர்வாடியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

இராமநாதபுரம் ஏர்வாடியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இராமநாதபுரம் ஏர்வாடியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள ஷஹீதியா மத்ரஸா மடம் எதிரே மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை, ராமநாதபுரம் சத்யா சிறப்பு மருத்துவமனை, பாலாஜி அட்வான்ஸ்டு லேப்ராஸ்கோபி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ மையம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த இலவச மருத்துவ முகாமிற்கு டாக்டர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். 

இதில் ஏராளமான முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் கார்த்திக் பாலாஜி, குழந்தைகள் சிறப்பு மருத்துவர் திவ்யா ராமமூர்த்தி, டாக்டர் ஜெகன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.

முகாமில் ஹெர்னியா குடலிறக்கம், வயிறு வீக்கம், வயிற்றுப்புண், சிறுநீரக கல்லடைப்பு, மார்பக கட்டி, விரைவீக்கம், மூலம், பவுத்திரம், கணையம், கல்லீரல் நோய், சளி காய்ச்சல், குழந்தை வளர்ச்சி குறைவு ஆகியவற்றுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படுவோரை கண்டறிந்து அவர்களுக்கு ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள சத்யா மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதுதவிர ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ரத்தவகை, சிறுநீர் முதலிய பரிசோதனைகளும் இலவச மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்பட்டது. பெண்களின் தாய்ப்பால் பிரச்சனைகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
 
இம்மருத்துவ முகாமில் தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை மற்றும் ஹக்தார் உறவின்முறை ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad