சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறிய ஆளும் திமுக அரசிற்கு எதிராக சிவகங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள அரண்மனை வாசல் அருகில் சிவகங்கை ஒன்றியம் மாத்தூர் ஊராட்சி நாட்டாக்குடி கிராமத்தில் நடைபெற்ற கொடூர கொலைகள் காரணமாக ஊரை காலி செய்து வெளியேறிய கிராம பொதுமக்களை மீண்டும் குடியமர்த்த உரிய பாதுகாப்பு வழங்க தவறிய ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசை கண்டித்து சிவகங்கை மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக "மாபெரும் ஆர்ப்பாட்டம்" சிவகங்கை அஇஅதிமுக மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் திரு பி. ஆர். செந்தில்நாதன் அவர்களின் தலைமையிலும், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு வி. வி. ராஜன் செல்லப்பா மற்றும் கழக அமைப்பு செயலாளர் ஏ. கே. சீனிவாசன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் தொடர் கொலைகளை தடுக்க தவறிய, மாவட்டங்கள் தோறும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தவறிய, நாட்டாக்குடியில் 350க்கும் மேற்பட்டோர் வசித்து வந்த நிலையில், ஊரை காலி செய்த கிராம பொதுமக்களை மீண்டும் குடியமர்த்த வலியுறுத்தயும், அக்கிராம பொதுமக்களை பாதுகாக்க மற்றும் பாதுகாப்பு வழங்க தவறிய கையாலாகாத ஆளும் விடியா திமுக அரசை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாக அதிமுக கட்சியினர் தங்கள் குரல்களை உயர்த்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் அஇஅதிமுக கட்சியின் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகராட்சி, பேரூர், ஊராட்சி மற்றும் கிளைகளை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக