சக மாணவர்கள் விவசாய கிணற்றில் குளிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற மாணவர் உயிரிழப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

சக மாணவர்கள் விவசாய கிணற்றில் குளிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற மாணவர் உயிரிழப்பு!

சக மாணவர்கள் விவசாய கிணற்றில் குளிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற மாணவர் உயிரிழப்பு!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 25 -

நண்பர்கள் குளிப்பதை வேடிக்கை பார்க்க சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு!. போலீசார் விசாரணை!

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை கோட்டூர் பகுதியை சேர்ந்த சஞ்சீவி மகன் நிர்மல் (வயது 13) என்ற 8ம் வகுப்பு படிக் கும் பள்ளி மாணவன் சனிக்கிழமை
பள்ளி விடுமுறை என்பதால் சக நண்பர் கள் அருகில் இருக்கும் விவசாய கிணற் றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.
சக நண்பர்கள் குளிப்பதை வேடிக்கை பார்ப்பதற்காக ஆர்வத்துடன் பள்ளி மாணவன் சென்ற நிலையில் அங்கு எதிர் பாராத விதமாக கால் இடறி கிணற்றில் விழுந்துள்ளான். இதனை அறிந்த சக நண்பர்கள் செய்வதறியாது ஓட்டம் பிடித் துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரை ந்து சென்று கிணற்றில் உயிரிழந்த நிலையில் இருந்த மாணவனை மீட்டு உள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீசார் சடலத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப் பத்தூர் அரசு மருத்துவமனையில் அனு மதித்து இந்த சம்பவம் குறித்து விசார ணை நடத்தி வருகின்றனர். மழைக் காலங்களில் நீர்நிலைகள் நிரம்பி இருக் கும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் செல்ல வேண்டாம் என்று காவல்துறை சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad