தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்லக் கூடாது என்று தடுத்த சூழல் சுற்றுலா காவலருக்கு அடி உதை! போலீசார் விசாரணை!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 25 -
திருப்பத்தூர் மாவட்டம், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு சனிக்கிழமை விடுமுறை என்பதால் சென்னை, பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்றுள்ள நிலையில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு சில சுற்று லா பயணிகள் சென்றதால் அதனை தடுப்பதற்காக சுற்றுலா சூழல் காவலர் ருத்ரமூர்த்தி தடுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணிகள் 3பேர் ருத்ர மூர்த்தியை தாக்கியதில் அவ ருக்கு முகம் மற்றும் உடல் பகுதியில் கா யம் ஏற்பட்டுள்ளது. முகத்தில் மூன்று தை யல் போட்ட நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ருத்ரமூர்த்தி சிகிச் சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு போலீசார் வழ க்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக