கோவில் திருவிழாவில் மேளதாளம் அடித் தவர்களுக்கு பணம் கேட்டது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 27 ஆகஸ்ட், 2025

கோவில் திருவிழாவில் மேளதாளம் அடித் தவர்களுக்கு பணம் கேட்டது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல்

கோவில் திருவிழாவில் மேளதாளம் அடித் தவர்களுக்கு பணம் கேட்டது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் !
வாணியம்பாடி, ஆகஸ்ட் 27 -

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் கோவில் திருவிழாவில் மேளதாளம் அடித்தவர்களு க்கு பணம் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே மோதல், தங்கள் குடும்பத்திற்கு  பாதுகாப்பு கேட்டும், சம்பந்தப்பட்ட நபர் கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவ லகத்தில் பெண் புகார் திரும்பத்தூர் மாவ ட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் கடந்து 19,20 ஆகிய தேதிகளில் பொன்னியம்மன் திருவிழா நடை பெற்று ள்ளது. அப்போது அங்கு மேளதாளம் அடி த்த ஆட்களுக்கு பணம் தரவில்லை என்று அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் திருவிழா நடத்திய கோபி,கிருஷ்ணன்
ஆகியோரிடம் கேட்டுள்ளார். அப்போது சுரேஷ் குமாரை அவர்கள் அவதூறாக
பேசி உள்ளனர். இதனால் ஆத்திரமடை ந்த சுரேஷ்குமாரின் மனைவி வான்மதி என் கணவரை எதற்காக அடித்தீர்கள் என கோபி,கிருஷ்ணன் ஆகியோரிடன் கேட்டு ள்ளார். இதன் காரணமாக கடந்த 22 ஆம் தேதி இரவு கோபி,கிருஷ்ணன் கோகுல், விஜய், சரளா பிரியா,லதா,ஜெயந்தி என குடும்பமாக ஒன்று சேர்ந்து கொண்டு சுரேஷ்குமாரின் வீட்டிற்கு சென்று சுரேஷ் குமார் அவருடைய மனைவி வான்மதி, சுரேஷ்குமாரின் தந்தை கிருஷ்ணமூர்த்தி , தாயார் சாந்தி ஆகிய நான்கு பேரையும் சரமாரியாக தாக்கியதாகவும் அந்த சம் பவத்தன்று வான்மதி கழுத்தில் இருந்து ஐந்து சவரன் தாலிசெயின் மற்றும் வான் மதியின் மாமியார் சாந்தி கழுத்திலிருந்த 3 சவரன் தாலி செயினை பறித்து சென்ற தாகவும் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். 
தகவல் அறிந்து வந்த காவலர் பேச்சுவார் த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து வைத்து சென்றுள்ளார். மேலும் காயம டைந்த நான்கு பேரும் ஒரு சிகிச்சைக் காக அடுக்கும்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்ற தாகவும் கூறப்படுகிறது. மேலும் கழுத் தில் இருந்து பறிக்கப்பட்ட நகையை கேட் டால்  காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை திரும்ப பெற்றால் நகைகளை திரும்ப கொடுப்பதாக கூறப்படுவதாக வும்  மேலும் கோபி என்பவர் தான்பிஜேபி கட்சியின் நகர செயலாளராக உள்ளதாக வும் தன்னை யாரும் எதுவும் செய்ய முடி யாது என கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை எனவும் இது தொடர் பாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் எங்கள் குடும்பத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் கோபி குடும் பத்தினரே முழு காரணம் எனவும் வான் மதி இன்று  திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad