திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒன்றியம் சார்பில் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட தலைமை உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் என்.எஸ்.கே.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் முருகானந்தம்,மாவட்டத் துணைத் தலைவர் சின்னத்துரை,அவர்களின் ஆலோசனைப்படி தாராபுரம் சட்டமன்ற தொகுதிப் பொறுப்பாளர் மணிவாசகம் அறிவுறுத்தலின்படி தொலைநோக்குப் பார்வை புதிய பசுமைப் புரட்சித் திட்டம் 2021-2025 ஆம் ஆண்டுகளில் நமது மாநில மரமான பனை மர விதைகள் ஒரு லட்சம் நடும் திட்டத்தின் கீழ் ஐந்தாம் ஆண்டு தொடக்கமாகவும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளான இன்று தாராபுரம் ஒன்றியம் நல்லாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ரெட்டார வலசு நல்லதங்காள் ஓடைப்பகுதியில் ஒரு மாத காலமாக இரண்டு டன் பனை விதைகள் சேகரித்து - 700 பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டது
மாவட்டத் துணை பொருளாளர் கே எஸ் ஈஸ்வரன் முன்னிலையில் நல்லாம்பாளையம் ஊராட்சி மன்ற பொறுப்பாளர் உதயகுமார், கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் முருகேசன்,பொருளாளர் சுப்பையன்,கரையூர் கிளைத் தலைவர் காளிதாஸ்,கருங்காலி வலசு கிளை தலைவர் சூர்யா தேன்,குமார்,ரகுபதி, தர்ஷன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இனிவரும் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சின்னவர் படை தன்னார்வலர்களாய் களப்பணியாற்றுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக