கலைஞர் நினைவு நாள் ஊர்வலம் – தாராபுரம் நகர திமுக செயலாளர் முருகானந்தம் தலைமையில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

கலைஞர் நினைவு நாள் ஊர்வலம் – தாராபுரம் நகர திமுக செயலாளர் முருகானந்தம் தலைமையில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது



தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர், தமிழ் மக்களின் மனத்தில் என்றும் நீங்கா இடம் பிடித்த திமுக தலைவர் தலைவர் மு. கருணாநிதி அவர்களின் நினைவு நாளையொட்டி, தாராபுரம் நகரில் திமுகவின் சார்பில் நினைவேந்தல் ஊர்வலம் நடைபெறப்பட்டது.


இந்த நிகழ்வு தாராபுரம் நகர திமுக செயலாளர் சு.முருகானந்தம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  ஊர்வலம்  துவங்கிய பூளவாடி பிரிவு இடத்திலிருந்து முழு நகரத்தையும் சுற்றி, பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஊர்வலத்தில், “தமிழ்க்குடி தந்தை கலைஞர் – நமது வாழ்வில் என்றும் உயிருடன்” என்ற எழுச்சிகரமான வாசகங்கள் கொண்ட பதாகைகள், புகைப்படங்கள் மற்றும் அமைதி ஊர்வலம் மூலமாக கலைஞரின் சாதனைகள் மக்களிடம் எடுத்துக்கூறப்பட்டன.


தொண்டர்கள், பெண்கள், இளைஞர் அணியினர், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இதற்காக நகரம் முழுவதும் போஸ்டர்கள், குத்துவிளக்குகள், பேனர்கள் மூலம் நினைவு நாளுக்கான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஊர்வலத்தில் நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன் தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.கே.துரைசாமி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், நகர அவைத் தலைவர் கதிரவன்,நகரத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன், நகர மன்ற உறுப்பினர்கள், அனைத்து வார்டு நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad