விடியல் சமூக சேவை அமைப்பு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது
கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா விடியில் சமூக சேவை அமைப்பு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை
KPD.இளஞ்செழியன் அவர்கள் வழங்கி, உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். விடியல் இயக்குனர்கள் ஆணைவாரி பாலமுருகன். மருதூர் சக்திவேல். ஜெயங்கொண்டன் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு
விடியல் துவக்கம், இன்றைய சேவைகள், நாளைய வளர்ச்சி குறித்தும் மது இல்லா குடியிருப்பு பகுதி, ஜாதி, மத, அரசியல் வன்முறையற்ற அணுகுமுறை,
நன்கொடை பெறாமல், அரசுக்கும், பொது மக்களுக்கும் நடுநிலையாக நம் உடல்நிலை, மனநிலை, பொருளாதார சூழ்நிலை இவைகளை பொறுத்து நம்மால் இயன்றதை இயன்ற அளவு சேவை ஆற்றவும்,மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளை வளரும் சமூகத்தின் படிப்பு, வேலைவாய்ப்பு, தொழில் தொடங்குதல் உள்ளிட்டவைகளுக்கு அரசின் சலுகைகளை எவ்வித கையூட்டமும் பெறாமல் துறை சார்ந்த அலுவலர்களிடம் பேசி தீர்வு காண்பது. அரசின் நல திட்டங்கள் மக்களிடம் சென்றடைய தடைகள் இருப்பின் அவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல், முரண்பாடு பேசுகிறவர்களோடு எதிர்த்து நிற்காமல் முற்போக்கான சிந்தையில் செயல்பட்டு வெற்றி காண்பது எவரோடும் எதிர்த்து நிற்காமல், நம் சேவைகளை எதிர்க்க நினைப்பவர்களையும், விட்டுக் கொடுத்து, அன்பால் அரவணைத்து, மனித நேயம் காத்து, மக்கள் மனதில் நீங்க இடம்பெறும் சேவையை தொடர்ந்திட, அர்ப்பணிப்பு அவசியம். சகிப்புத்தன்மை அவசியம் .பொறுமை அவசியம். நிதானம் அவசியம் உள்ளிட்ட வார்த்தைகளால் கருத்து முன்மொழிந்தார் சேத்தியாத்தோப்பு கே பி டி திருமண மண்டபத்தில் நடைபெற்ற விடியல் உறுப்பினர் படிவு வழங்கல் சேர்க்கை விழாவில்.. அனைத்து தரப்பில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் நிகழ்ச்சியில் இறுதியில்
ஜெயங்கொண்டம் வீரமணி அவர்கள் நன்றியுரை வழங்கினார்
தங்கள் குடியிருப்பு பகுதிகளில் மேற்கொண்ட நிலைப்பாட்டில் விடியல் சமூக சேவை அமைப்பில் இணைந்து சேவையாற்று விரும்பினாலோ, தங்கள் சூழ்நிலை சாதகமாக இல்லை என்றால் தங்களுக்கு நன்கு அறிமுகமாகி மனிதநேயம் உடையவர்கள் சேவை செய்ய விரும்புகிறவர்களை அறிமுகம் செய்து தங்கள் பகுதியில் விடியல் சமூக சேவை அமைப்பின் எதிர்பார்ப்பில்லா, நன்கொடை இல்லா வன்முறையில்லா மனிதநேய சேவையை தொடங்கிட விரும்பினால். 7373224027 அழைத்து விண்ணப்ப படிவத்தைப் பெற்று விடியல் சமூக சேவை அமைப்பில் இணைந்து கொள்ளுமாறு விடியல் சமூக சேவை அமைப்பின் நிறுவனத் தலைவர் விடியல் புஷ்ப சவரி ராஜன் அவர்கள் கேட்டுக்கொண்டார்
சிறப்பு
பதிலளிநீக்கு