ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் சிறப்பு கூட்டம் தலைவர் திரு.மஞ்சை.வி.மோகன் அவர்கள் தலைமையில், - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம் சிறப்பு கூட்டம் தலைவர் திரு.மஞ்சை.வி.மோகன் அவர்கள் தலைமையில்,


ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம்  சிறப்பு கூட்டம் தலைவர் திரு.மஞ்சை.வி.மோகன் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர்கள் திரு.இளித்தொரை விஸ்வநாதன்,  திரு.கேத்தி பாலாட ராமசந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று  உதகையில்  நடந்தது.  


கூட்டத்தில்  இணை செயலாளர்கள் திரு.குந்தெசப்பை.நடராஜன், திரு.மேல்குந்தா பூபதி கண்ணன், செயற்குழ உறுப்பினர்கள் திரு.பெம்பட்டி.வாசு, திரு.கேர்பெட்டா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உள்பட புதிய விவசாயிகள் சங்க நிர்வாகிகள்  கலந்துக்கொண்டனர்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.


1) வரும் 12-08-2025-  செவ்வாய்கிழமை குறைந்தப்பட்ச ஏலத்தொகையாக தேயிலைத்தூள் கிலோ ஒன்றுக்கு ரூ.200/- க்கு குறையாமல் ஏலத்தொகை நிர்ணயம் செய்ய, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ,தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடன், நமது ஆரிகவுடர் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடத்திட முடிவுச் செய்யப்பட்டது...


2) இந்திய தேயிலை வாரிய வரலாற்றில் 14-08-2025 - வியாழக்கிழமை அன்று தென்னிந்திய பகுதியான குன்னூரில் நடைப்பெறும்  இந்திய தேயிலை வாரியம் கூட்டம்,  இந்திய தேயிலை வாரிய தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளும் கூட்டமாக சிறப்புடன் நடந்திடவும், பசுந்தேயிலை விவசாயிகளின் நீண்டக்கால கோரிக்கையான, தேயிலை தூள் ஏலத்தொகை குறைந்தப்பட்சமாக ரூ200/-க்கு குறையாமல் விற்பனை செய்திட நடவடிக்கை  எடுத்தும், சட்டமாகவும் நிறைவேற்ற உள்ளதாக வரும் தகவலை  ஆரிகவுடர் விவசாயிகள் சங்கம்  மனதார வாழ்த்தி வரவேற்கிறது. 


3) இந்திய தேயிலை வாரியம் கூட்டம் நடக்கும் நாள் 14-08-2025-க்கு முன்பாக தென்னிந்திய தேயிலை வாரிய அலுவலகமான குன்னூர் அலுவலகத்திற்கு நிரந்தரமான, செயல் இயக்குனர் பதவியை உடனடியாக நிரப்பிட வேண்டும். என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


முன்னதாக பொருளாளர் திரு.எடக்காடு மகாலிங்கன் வரவேற்புரை ஆற்றினார்.


முடிவில் பொதுச்செயலாளர் திரு.அப்புகோடு நடராஜன் அவர்கள் நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad