குடியாத்தத்தில் ஆட்டோ இருசக்கர வாகனம் மோதி விபத்து போலீசார் விசாரணை!
குடியாத்தம் ,ஆகஸ்ட் 8 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக் கரை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சற்குணம் என்பவர் தன்னுடைய குடும்பத் தினரை அழைத்துக் கொண்டு காட்பாடி ரோடு வழியாக செல்கிறார் அப்போது நாய் குறுக்கே வந்ததால் ஆட்டோவை இடது புறம் திரும்பும் போது கதிர்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் இரு சக்கர வாகனத்தில் ஆட்டோ மீது மோதிகிறார் இதனால் ஆட்டோ கவிழ்ந்து ஆட்டோவில் சென்ற மூன்று பெண்களுக்கும் காயம் ஏற்படுகிறது சம்பவ இடத்திற்கு சென்ற நகர போலீசார் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக நகர போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக