ஈரோடு மாவட்டத்தில் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், பால்கோவா, பாதாம்பவுடர், நறுமணபால், ஐஸ்கிரீம் போன்றவற்றை விற்பனை செய்ய மொத்த விற்பனையாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. விருப்பம் உள்ளவர்கள் பெயர், முகவரி, குடும்ப அட்டை, பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தகம் நகல் ஆகியவற்றுடன் புகைப்படம் ஒட்டி, பொது மேலாளர், ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிட், வாசவி கல்லூரி அஞ்சல், ஈரோடு -638 316 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக