உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்!

உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்!

திருப்பத்தூர் ,  ஆகஸ்ட் ‌8 -

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பாக உலக தாய்ப்பால் வார விழா விழிப்புண ர்வு பேரணி! கொடி அசைத்து துவக்கி வைத்த கலெக்டர்! 150க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்பு! 

திரும்பத்தூர் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் துறை சார்பாக உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை கொண்டாடப்பட வருகிறது இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி யர் வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சி யர் சிவசௌந்தரவள்ளி பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்
இதில் 150க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள்  கலந்து கொண்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாக த்தில் இருந்து தூய நெஞ்சக் கல்லூரி வரை கையில் பதாகைகளை ஏந்தி சென்று தாய்ப்பாலின் அவசியத்தை பற்றி  விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தாய்ப்பால் இயற்கையின் பரிசு அன்பின் வெளிப்பாடு, வீட்டு உணவை உடல் நலத் தை காக்கும், தாய்ப்பால் ஒரு அமுத சுரபி, உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள்அடங்கிய பதாகைகளைஏந்தி தாய்பாலின்முக்கியத் துவம் குறித்து  பேரணி நடைபெற்றது. 
இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார்,  வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, பணி மேற்பார்வையாளர்கள், மற்றும் அங்கன் வாடி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 செய்தியாளர்
மோ. அண்ணாமாலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad