தென்மண்டல கத்தோலிக்க திரு அவை மற்றும் தென்னிந்திய திருச்சபை இறை சமூகம் சார்பில் நாசரேத் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

தென்மண்டல கத்தோலிக்க திரு அவை மற்றும் தென்னிந்திய திருச்சபை இறை சமூகம் சார்பில் நாசரேத் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அருட் சகோதரிகள் கட்டாய மதமாற்றம் செய்தார்கள் என பழி சுமத்தி, நீதிக்கு புறம்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இதனை கண்டித்து தென்மண்டல கத்தோலிக்க திரு அவை மற்றும் தென்னிந்திய திருச்சபை இறை சமூகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாசரேத் பேருந்து நிலையம் முன்பு இன்று 03.08.25 மாலை 4 மணி முதல் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்னிந்திய கத்தோலிக்க பணி குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை பிரான்சிஸ் தலைமை தாங்கி நடத்தினார். துரை குடியிருப்பு பங்கு அருட்தந்தை ஜெரால்ட் ரவி , பிரகாசபுரம் பங்கு அருட்தந்தை அமல்ராஜ் அடிகளார், தென் மண்டல கலப்பை இதழ் ஆசிரியர் அருட்தந்தை செல்வரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கத்தோலிக்க சபைகளான பிரகாசபுரம், தோப்பூர், உடையார்குளம், கந்தசாமிபுரம், மாதாவனம் ஆகிய சபை மக்கள்,  மரியின் சபை ஊழியர்கள் கன்னியாஸ்திரிகள், தென்னிந்திய திருச்சபையை சார்ந்த நாசரேத், திருமறையூர், பிரகாசபுரம், வகுத்தான்குப்பம், மணிநகர், அகப்பைக்குளம், பிள்ளையன்மனை, வாழையடி சேகர இறை மக்கள், பிரகாசபுரம் சேகர குரு அருட்திரு நவராஜ், நாசரேத் பேராலய தலைமை குரு அருட்திரு ஹென்றி ஜீவானந்தம், உதவிக் குரு அருட்திரு தனசேகர் ராஜா, மூக்குபேரி சேகர குரு அருட்திரு ஞானசிங் எட்வின், நாசரேத் காமா ஜெபக் குழுவினர், நாசரேத் சுற்று வட்டார அனைத்து ஆலய சபை ஊழியர்கள், நாசரேத் நகர வணிகர் சங்கம், நாசரேத் பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி, காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் ஐஜினஸ், முன்னாள் நாசரேத் பஞ்சாயத்து தலைவர் மாமல்லன், நாசரேத் சுற்றுவட்டார கிறித்துவ மக்கள், சிறுபான்மையினர் சமூக மக்கள், பொதுமக்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது அருட் சகோதரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad