கே.வி.குப்பம், மேல்மாயிலில் பேனர் கிழத்த தகராறில் இருதரப்பினரிடையே அடிதடி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

கே.வி.குப்பம், மேல்மாயிலில் பேனர் கிழத்த தகராறில் இருதரப்பினரிடையே அடிதடி!

கே.வி.குப்பம், மேல்மாயிலில் பேனர் கிழத்த தகராறில் இருதரப்பினரிடையே அடிதடி!
கே வி குப்பம்,  ஆகஸ்ட் 3 -

கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயிலில் இருதரப்பினரிடையே மோதல், ஒருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி காவல் துறை அதிரடியாக 22 பேர் மீது வழக்கு பதிவு

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தாலுகா, மேல்மாயில் கிராமத்தை சேர்ந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு மணமக்களின் நண்பர்கள் சார்பில், ஆலமரம் பேரூந்து நிறுத்தம் பகுதியில் பேனர் வைக்கப் பட்டள்ளது. அந்த பேனரில் அம்பேத்கர் படம் இடம் பெற்றிருந்தது. அதை 31-08-2025 இரவு மர்ம நபர்கள் சிலர் பேனரை சேதப்படுத்தியுள்ளனர். அதனால் அதே பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே சலசலப்பு இருந்து வந்ததுள் ளது. இந்நிலையில் 01-08-2025  அன்று இரவு மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர், சிலர், மற்றொரு தரப்பி னரை அவர்கள் வீட்டைத் தேடிச் சென்று  அவதூறான வார்த்தைகளால் திட்டியும், வீண் தகராறில் ஈடுபட்டள்ளனர். 
மேலும் அதை தடுக்கச் சென்ற  நாட்டா மை பழனியை (வயது 48) அந்த கும்பல் சரமாரியாக கட்டையால் தாக்கியதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட் டள்ளது.  அங்கிருந்து அவர்கள் அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சுக்காக அவரை வேலூர் தனியார் மருத்துவமனை அவசர பிரிவு சிகிச்சை யில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மேல்மாயில் ஒரு தரப்பினர் கே வி குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் புகார்கொடுத்தனர் மேலும், இது சம்பந்தப்பட்டவர்களை உட னே கைது செய்ய வேண்டும் என கே வி குப்பம் போலீஸ் ஸ்டேஷன் முன்பு 100க் கும் மேற்பட்ட ஊர்பொதுமக்கள் குவிந்த னர். இதனால் அங்கு பரபரப்பானது. இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து துருவி துருவி விசாரணை வருகின்றனர்.நாட்டாமை பழனி என்பவரின் உறவினர் நிஷா கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக  மூலகாங்குப்பம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 34), மேல்மாங்குப்பம் பகுதியை சேர்ந்த விமல் (வயது 45), மேல்மாயில் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 32), வேடநாதன் (வயது 24), உள்ளிட்ட இரண்டு சிறுவர்கள் என மொத்தம் 7 பேர் மீது வண்கொடுமை தடுப்பு சட்டம்  உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலிசார் 02-08-2025 சனிக்கிழமை இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமைறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர். இதையடுத்து அசம்பாவி தம் நடக்காமல் இருக்க போலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். வருவாய் துறையி னர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில்  பரபரப்பான சூழல் உள்ளதாக தெரிவிக் கின்றனர். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad