ரெட்கிராஸ், வேலூர் ரத்தம் மையம் பிரம் மபுரம் திரைப்படம் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து இரத்த தான முகாம், இலவச கண் சிகிச்சை முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 ஆகஸ்ட், 2025

ரெட்கிராஸ், வேலூர் ரத்தம் மையம் பிரம் மபுரம் திரைப்படம் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து இரத்த தான முகாம், இலவச கண் சிகிச்சை முகாம்!

ரெட்கிராஸ், வேலூர் ரத்தம் மையம் பிரம் மபுரம் திரைப்படம் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து இரத்த தான முகாம், இலவச கண் சிகிச்சை முகாம்
காட்பாடி , ஆகஸ்ட் ‌23 -
 
வேலூர்  மாவட்டம் காட்பாடி  இந்தியன் ரெட்கிராஸ் சங்கம், காட்பாடி பிரம்மபுரம் திரைப்படம் சார்ந்த தொழில்நுட்ப நிறுவ னம், வேலூர் ரத்த மையம் மற்றும் சென் னை  அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து ரத்த தான முகாமும் மற்றும் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்  இன்று டிஜிட்டல் ஸ்ட்ரோம் நிறு வன வளாகத்தில் நடைபெற்றது முகா மினை காட்பாடி ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் முனைவர் செ. நா.ஜனா ர்த்தனன்  நிறுவன மேலாளர் த.மோகன் குமார் ஆகியோர் தொடக்கி வைத்தார்கள்
விழாவிற்கு மனித வளத்துறை மேலாளர் சுப்ரியா வெங்கடேஷ் தலைமை தாங்கி னார் . தயாரிப்பாளர் கே விக்னேஷ்  வர வேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் கே.சிவன்,  இரத்த மையத்தின் குழு தலை வர் சூரிபாபு, சுதாகரன் ஆகியோர்முன்னி லை வகித்தனர்.  பொது மருத்துவர் டாக் டர் பரமேஸ்வரன் இரத்த தானம் செய்வ தன் அவசியம் குறித்தும் கண் பரிசோத னையின் அவசியம் குறித்தும் பேசினார்.
இந்த முகாமில் அகர்வால் கண் மருத்துவ மனையின் சார்பில் இலவச கண் பரிசோ தனைகளும் செய்யப்பட்டன  100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை யும் கண் பரிசோதனைகளையும் செய்து கொண்டனர் 30பேர் ரத்த தானம் செய்த னர். இரத்த தானம் செய்த அனைவருக் கும் சான்றிதழ்களும் பாராட்டு கேடைய மும்  காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலை வர் செ.நா.ஜனார்த்தனன் அவர்களால் வழங்கப்பட்டது நிகழ்ச்சியின் முடிவில் வேலூர் ரத்த மையத்தின் ஒருங்கிணைப் பாளர் கே.சிவன் நன்றி கூறினார்

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad